மனிதநேய மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 3 தொகுதிகள் தமிழகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. தனிச்சின்னத்திலே 3 தொகுதிகள் என்பது பாராட்டுக்குரியது. நம்முடைய பிரதிநிதிகள் இறைவன் நாடினால் சட்டமன்றத்தில் நம்முடைய கோரிக்கைகளையும் உரிமைகளையும் பெற்றுத்தர 3 சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வார்கள். அனைத்து இஸ்லாமிய சகோதரர்களும் அல்லாஹ்விடத்தில் துஆ செய்யுங்கள். இறைவன் கொடுக்க நினைப்பதை எவனாலும் தடுக்க முடியாது., இறைவன் தான் நாடியவர்களை ஆட்சியில் அமர்த்துவான்.
Search This Blog
Thursday, 24 February 2011
இறைவன் நாடினால்...
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 20.03.2011 ஞாயிற்றுக் கிழமை ஆயங்குடியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாபெரும் அரசியல் எழுச்சிப் பொதுகூட்டம் நடைபெறவுள்ளது. மாநில தலைவர் முனைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். மேலும் மாநில செயலாளர் பேராசிரியர் ஜெ.ஹாஜாகனி, மாநில துணைசெயலாளர் எஸ்.எம்.ஜின்னா மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் சிறப்புரை யாற்ற இருக்கிறார்கள். இந்த பொதுகூட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சொந்தங்களும் சமுதாய சொந்தங்களும் திரண்டு வந்து ஆதரவளிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். சமுதாய போராளிகளே திரண்டு வருக! ஆதம்(அலை) பாவாவின் வாரிசுகளே வருக! வருக! அன்புடன் அழைக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்& மனிதநேய மக்கள் கட்சி ஆயங்குடி கிளை(கடலூர் தெற்கு).
மனிதநேய மக்கள் கட்சி
அல்ஹம்துலில்லாஹ்... அதிமுக கூட்டணியில் மமகவிற்கு 3 தொகுதிகள் சுய சின்னத்தில் போட்டியிட ஒதுக்கப் பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் தமுமுக சகோதரர்கள் 3 தொகுதியிலும் நாம் வெற்றி பெற ஏக இறைவனிடம் பிரார்த்திப்பதோடு அதற்கான களப் பணியிலும் நாம் ஈடுபட வேண்டும் என அனைத்து நல் உள்ளங்களையும் கேட்டுக் கொள்கிறோம். நம்மை இகழ்ந்து பேசவும் நம் வளர்ச்சியை தடுப்பதையும் குறிக்கோளாகக் கொண்டு வெளி உலகில் ஏகத்துவத்தை மட்டுமே நாங்கள் பேசுவோம் அரசியல் செய்ய மாட்டோம் என்று கூறிக் கொண்டு மமகவிற்கு எதிராக மட்டும் எங்கள் அரசியல் இருக்கும் என பொதுக்குழு தீர்மானம் போடும் போலி ஆன்மீக வாதிகளும் ஆன்மீக வியாபாரிகளுமான புதிய மதஹபின் இமாம் பீயன்னா ஜைனுல் ஆபிதீன் அவர்களின் குள்ளநரித்தனத்தின் குழப்பங்களிருந்து எனது உத்தம திரு நபி(ஸல்)யின் சமுதாயமே உம்மையும் எம்மையும் அந்த ஏக இறைவன் பாதுகாத்தருள்வானாக! ஆமீன்.......
Subscribe to:
Posts (Atom)